சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை சுமார் 1770 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு கூறும்போது, “ சீனாவில் கோவிட்-19 (கரோனா ) வைரஸ் பாதிப்புக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1770 ஆக அதிகரித்துள்ளது. கோவிட்-19 ( கரோனா ) வைரஸ் பரவிய ஹுபே மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை 100 பேர் பலியாகினர். மேலும் உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 71,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜப்பானின் யோககாமா துறைமுகத்தில் இருக்கும் டைமண்ட் பிரின்ஸ் சொகுசுக் கப்பலில் தங்கி இருக்கும் பயணிகளில் 350 பேருக்கு கோவிட்-19 (கரோனா) வைரஸ் பாதிப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவைத் தவிர 25 நாடுகளில் கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பு உள்ளது. இதில் சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஹாங்காங் ஆகிய நாடுகளில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
முன்னதாக, சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. சீனா மட்டுமல்லாமல் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கரோனா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
தவறவீடாதீர்!
முக்கிய செய்திகள்
உலகம்
28 mins ago
உலகம்
10 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago