புகழ்பெற்றோர் வரிசையில் பேஸ்புக் தன்னை நம்பர் 1 என்றும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நம்பர் 2 என்றும் குறிப்பிட்டுள்ளது மிகப்பெரிய கவுரவம் என்று அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 24 மற்றும் 25 தேதிகளில் அதிபர் ட்ரம்ப் மற்றும் ஃபர்ஸ்ட் லேடி மெலானியா ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகை தரவுள்ள நிலையில் அதிபர் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பேஸ்புக்கைச் சுட்டிக்காட்டி அதிபர் ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில், “மிகப்பெரிய மரியாதை என நினைக்கிறேன். மார்க் ஸுக்கர்பர்க் 'டோனல்ட் ஜே.ட்ரம்ப் நம்பர் 1’ என்றும் மோடியை நம்பர் 2 என்றும் குறிப்பிட்டுள்ளார். 2 வாரங்களில் இந்தியா செல்கிறேன். இந்தப் பயணத்தை எதிர்நோக்குகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.
ஆனால் முகநூலில் இவர்கள் இருவரையும் நம்பர் 1 மற்றும் 2 என்று அழைப்பது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் ட்ரம்ப் இந்த முறை இந்தியா வரும்போது அகமாதாபாத்தில் கட்டப்பட்ட உலகிலேயே பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோடியுடன் இணைந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago