சீனாவில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 908 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சீன தேசிய சுகாதார அமைப்பு தரப்பில், “ சீனாவை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 908 ஆக அதிகரித்துள்ளது. 40,000க்கு மேற்பட்ட மக்கள் இவ்வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
25 நாடுகளுக்கும் மேலாக அந்த வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
மேலும் 4,000க்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தாக்கம் இருப்பதாக நேற்று மட்டும் கண்டறிப்பட்டது.
முன்னதாக, சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
கரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க சீனா சிறந்த முறையில் செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago