அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை, அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
41 வயதான கிறிஸ்டினா கோச், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர். மின் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற கிறிஸ்டினா விண்வெளியில் அதிக நாட்கள் தங்கிய பெண் என்ற சாதனையுடன் பூமிக்கு இன்று வந்தடைகிறார்.
சுமார் 328 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இந்தச் சாதனையை கிறிஸ்டினா படைத்துள்ளார்.
இந்நிலையில், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் விண்வெளி வீரர் லூகா பர்மிடானோ மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் ஸ்க்வொர்ட்சோவ் ஆகியோருடன் கிறிஸ்டினா வியாழக்கிழமை பூமிக்குத் திரும்ப இருக்கிறார்.
முன்னதாக, விண்வெளித் தளத்தில் இருந்தபடி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட கிறிஸ்டினா பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
அதில் அவர் கூறுகையில், “நீங்கள் எப்போது தரைக்கும், உச்சிக்கும் இடையில் போன்ற பகுதியில் இருப்பது. நிச்சயம் இது வேடிக்கையானது. நான் இதனை நிச்சயம் மிஸ் செய்வேன்” என்று பதிலளித்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
11 days ago
உலகம்
11 days ago
உலகம்
12 days ago