கரோனா வைரஸ் தாக்கிய வுஹான் நகரின் காலித் தெருவில் சடலத்தால் அதிர்ச்சி

By ஏஎஃப்பி

கரோனா வைரஸ் பெரிய அளவில் தாக்கிய சீனாவின் வுஹான் நகரின் மூடப்பட்ட பர்னிச்சர் கடை வாசலில் முகமூடி அணிந்த ஒரு நபரின் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் கையில் பிளாஸ்டிக் ஷாப்பிங் பேக் ஒன்றும் இருந்தது. தொழில் நகரமான வுஹானில் பொதுவாக நெரிசலாக இருக்கும் பகுதி கரோனா தாக்கத்தினால் வெறிச்சோடிக் கிடந்தது. முகமூடி அணிந்த ஒரு சிலர் மட்டுமே ஆங்காங்கே நடந்து சென்றனர், ஆனால் இவர்கள் இந்த சடலத்தின் அருகே செல்ல அச்சம் கொண்டிருந்தனர்.

ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்தின் செய்தியாளர்கள் வியாழன் காலை இந்தச் சடலத்தை கடை வாசலில் கண்டனர், அதன் பிறகு எமர்ஜென்சி வாகனம் அங்கு வந்தது. இவர்கள் அந்த சடலத்தின் மீது பிளாங்கெட்டைப் போர்த்திவிட்டுச் சென்றது. ஆம்புலன்ஸ் மறைந்தவுடன் போலீஸார் சூப்பர் மார்க்கெட் கார்ட்போர்டு பெட்டிகள் மூலம் சம்பவ இடத்தை மறைத்தனர்.

சுமார் 60 வயது மதிக்கத்தக்க இந்த மனிதர் எப்படி, எதனால் இறந்தார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் சுகாதார அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விசாரித்தும் பயனில்லை.

இவர் கரோனா வைரஸுக்கு பலியானவர்தான் என்று பொதுமக்களிடையே பெரும் அச்சம் பரவி வருகிறது. கரோனா வைரஸுக்கு இதுவரை சீனாவில் 213 பேர் மடிந்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வுஹானில் மருத்துவமனைகளில் கூட்டம் நெறிபடுகிறது, சிலர் 2 நாட்களாக வரிசையில் காத்திருக்கவும் நேரிட்டுள்ளதாக செய்தி ஏஜென்சி தெரிவிக்கிறது.

அதே வழியில் ஏகப்பட்ட ஆம்புலன்ஸ்கள் சென்றாலும் இந்த சடலத்தை கவனிப்பாரில்லை, கடைசியாக வெள்ளை வேன் ஒன்று வந்து சடலத்தை எடுத்துச் சென்றதாக ஏ.எப்.பி. தெரிவிக்கிறது. உடனேயே அந்த இடத்தில் நோய் தொற்று மருந்து அடிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

11 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்