மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் ஜம்மு காஷ்மீர் 370 பிரிவு ஆகியவற்றுக்கு எதிராக பிரசஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஐநாவின், மனித உரிமைகள் ஆணையம் கடந்த மாதம் விடுத்த அறிவிப்பில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்துக் குறிப்பிடுகையில், " இயற்கையில் அடிப்படையில் பாகுபாட்டுடன் இருக்கிறது, பாகுபாட்டுடன் இருக்கும் அம்சங்கள் அனைத்தையும் நீக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் இந்தியா நிறைவேற்றிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 பிரிவை ரத்து செய்தது குறித்தும் தீர்மானம் கொண்டுவந்து இன்று விவாதிக்கப்பட உள்ளது.
ஐரோப்பிய யூனியன் அமைப்பில் உள்ள 751 உறுப்பினர்களில் 626 உறுப்பினர்கள் சேர்ந்து குடியுரிமைத்திருத்தச் சட்டம் மற்றும் காஷ்மீர் 370 பிரிவு ரத்து தொடர்பாக 6 தீர்மானங்களை முன்வைத்துள்ளார்கள். இந்த தீர்மானங்கள் அனைத்தும் இன்று விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
ஐரோப்பிய யூனியனில் உள்ள சோசலி முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயகக் கட்சி(எஸ்&டி), ஐரோப்பிய மக்கள் கட்சி(கிறிஸ்துவ ஜனநாயகக்கட்சி), குரூப் ஆப்தி கிரீன்ஸ் ப்ரீ அலெயன்ஸ், ஐரோப்பிய பழமை வாதிகள் மற்றும் சீர்திருத்தக் குழு(ஈசிஆர்), ஐரோப்பியப் புதுமைக் குழு(ரிநியூ), ஐரோப்பிய யுனெடெட் லெப்ட், நார்டிக் க்ரீன் லெப்ட் குழு ஆகியவை 6 தீர்மானங்களை முன்வைத்துள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக எந்த தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது என்று மத்திய அரசு கண்டித்துள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது முழுவதும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மூலம் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டு, சட்டமாகியுள்ளது. இந்த சட்டத்தின் நோக்கம் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதாகும் எனத் தெரிவித்துள்ளது
இதற்கிடையே மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் தலைவர் டேவிட் மரியா சசோலிக்கு எழுதிய கடிதத்தில், ஜனநாயகத்தின் மதிக்கும் நாடுகள் கொண்ட அமைப்பில் மற்றொரு ஜனநாயக நாடு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவது முறையல்ல. இது ஒருசார்பாக எடுக்கும் முயற்சியாகும். இந்தியாவின் இறையாண்மைக்கும், எம்.பி.க்களின் உரிமைக்கும் மதிப்பளிக்க வேண்டும் " எனத் தெரிவித்துள்ளார்
அதேசமயம் ஐரோப்பிய நாடாளுமன்ற எம்.பி.க்கள் கூறும் புகாரில், இந்தியா, பூடான், பர்மா, நேபாளம், இலங்கையுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் முஸ்லிம்களை அனுமதிக்க மறுக்கிறது, இலங்கையில் இருந்து தமிழர்களை அனுமதிக்க மறுக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் வாழ்ந்தும் அவர்களுக்குக் குடியுரிமை இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago