கரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக சுமார் 4.4 பில்லியன் யென் நிதியை சீன அரசு ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து சீன நிதி அமைச்சகம் கூறும்போது, “கரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சுமார் 4.4 பில்லியன் யென் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க டாலர் மதிப்பில் 640 மில்லியன் டாலர் ஆகும்.
மேலும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள ஹுபை மாகாணத்திற்கும் கூடுதலால 500 மில்லியன் யென் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹுபே மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
கரோனா வைரஸ் சீனா உட்பட சில நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது சீனாவில் கரோனா வைரஸுக்கு 130 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளில் சீனா தீவிரமாக இறங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago