ஜெர்மனியில் மேலும் மூவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

By செய்திப்பிரிவு

ஜெர்மனியில் மேலும் மூன்று பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இத்தகவலை ஜெர்மனி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி சுகாதாரத்துறை தரப்பில், “பாவாரியா மாகாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களுடன் சேர்த்து ஜெர்மனியில் நான்கு பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது.

பயிலரங்க நிகழ்வில் கலந்துகொண்ட சீனாவைச் சேர்ந்தவர் மூலம் இந்த கரோனா வைரஸ் ஜெர்மனியர்களுக்கும் பரவியுள்ளது.

இந்நிலையில் இந்தப் பயிலரங்கத்தில் கலந்துகொண்ட பிறருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு ‘கரோனா' வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

கரோனா வைரஸ் சீனா உட்பட சில நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது சீனாவில் கரோனா வைரஸுக்கு 130 பேர் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

மேலும்