கொல்லப்பட்ட ஈரான் புரட்சி படை தளபதி சுலைமான் ஒரு நம்பர் ஒன் தீவிரவாதி என்றும் அவருக்கு ஆதரவாக ஜனநாயக கட்சி இருப்பது நாட்டிற்கு அவமானம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் புரட்சி படை தளபதி சுலைமான் கொல்லப்பட்டதை மீண்டும் நியாயப்படுத்தி இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
இதுகுறித்து ட்ரம்ப் திங்கட்கிழமை கூறும்போது, “ நாங்கள் உலகின் நம்பர் ஒன் தீவிரவாதியான சுலைமானை கொன்றோம். சுலைமான் ஏராளமான அமெரிக்கர்களையும், மக்களையும் கொன்றவர். அவரைதான் நாங்கள் கொன்றோம். அவருக்கு ஆதரவாக ஜனநாயகக் கட்சியினர் இருந்தால் அது நமது நாட்டிற்கு அவமானம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரான் படையின் தளபதி காசிம் சுலைமானைக் கடந்த 3-ம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் கொன்றது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமான், அவரின் மருமகன் முகந்தியாஸ் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது.
இந்தச் சூழலில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் 'அன் அல் ஆசாத்' மற்றும் 'ஹாரிர் கேம்ப்' ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
2 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago