ஈரானுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற முதல் பெண் நாட்டிலிருந்து வெளியேறினார்

By செய்திப்பிரிவு

ஈரானில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே பெண்ணான கிமியா அலிசட் அந்நாட்டில் அரசியல் நோக்கங்களுக்காக விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று குற்றச்சட்டியுள்ளதுடன் இதன் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிமியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ ஹலோ... குட் பை... அல்லது இரங்கல்கள்.... இதில் நான் எதிலிருந்து தொடங்க? ஈரானில் ஒடுக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான பெண்களில் நானும் ஒருத்தி. அவர்கள் என்ன உடுத்த கூறுகிறார்களோ அதையே நானும் உடுத்தினேன். அவர்கள் கூறிய அனைத்தையும் நான் செய்தேன். ஆனால் அதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. யாரும் என்னை ஐரோப்பாவுக்கு அழைக்கவில்லை. ஈரான் மக்களே.. நான் எங்கிருந்தாலும் ஈரானின் குழந்தைதான்” என்று அவர் தற்போது இருக்கும் இடத்தை குறிப்பிடாமல் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் கிமியா, நாட்டிலிருந்து வெளியேறி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

21 வயதான கிமியா 2016 ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் டேக்வோண்டோவில் ஈரானுக்கு வெண்கலம் பெற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய விவகாரத்தில் ஈரான் மீது உலக நாடுகளின் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் கிமியாவின் இந்த முடிவு ஈரானுக்கு சறுக்கலாக பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

1 hour ago

உலகம்

11 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்