ஓமனின் புதிய மன்னராக ஹைதம் பின் தாரிக் பதவியேற்பு

By செய்திப்பிரிவு

ஓமனின் புதிய மன்னராக அந்நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர் ஹைதம் பின் தாரிக் பதவியேற்றார்.

ஓமன் மன்னர் காபூஸ் பின் சைத் சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக பெல்ஜியம் சென்று வந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக காபூஸ் பின் சைத் மரணமடைந்ததாக ஓமன் அரசு தெரிவித்தது.

இந்நிலையில், ஓமனின் புதிய மன்னராக கலாச்சாரத் துறை அமைச்சர் ஹைதம் பின் தாரிக் அல் சைத் இன்று அறிவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அரச குடும்பத்தில் நடந்த கவுன்சிலிங் கூட்டத்தில் ஹைதம் பின் தாரிக் அல் சைத் பதவி ஏற்றுக்கொண்டார்.

மறைந்த ஓமன் மன்னர் காபூஸ் பின் சைத் கடந்த 1970 ஆம் ஆண்டு தனது தந்தையை ஆட்சியிலிருந்து வெளியேற்றி அரியணையில் ஏறியவர். இவரது ஆட்சிக் காலத்தில் ஓமனில் பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார். 79 வயதான காபூஸ் பி சைத் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓமனை ஆட்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

17 hours ago

உலகம்

20 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்