ஈரான் பிரபல தளபதி காசிம் சுலைமானியைக் கொல்ல உதவிய ‘இன்பார்மர்கள்’

By ஏஎஃப்பி

பெரும் போர்ப்பதற்றத்தை உருவாக்கிய ஈரான் படைத்தளபதி காசிம் சுலைமானி கொலைக்குக் காரணமான இன்பார்மர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் தளபதி காசிம் சுலைமானியை கொல்ல, ஈராக் மற்றும் சிரியாவில் இருந்து இன்ஃபார்மர்கள் கொடுத்த தகவலே, அமெரிக்காவுக்கு உதவியாக இருந்தது என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 3ஆம் தேதி பாக்தாத் விமான நிலையத்தின் அருகே, டிரோன் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில், காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். முன்னதாக அவர், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் இருந்து ‘சாம் விங்ஸ்’ நிறுவன பயணிகள் விமானத்தில் புறப்பட்டு, பாக்தாத் வந்திறங்கியுள்ளார்.

இந்த இரு இடங்களில் இருந்து இன்ஃபார்மர்கள் அமெரிக்காவுக்கு அளித்த தகவலே சுலைமானியை கொலை வீழ்த்துவதற்கு உதவியாக இருந்துள்ளது. பாக்தாத் விமான நிலைய ஊழியர்கள் 2 பேர், போலீஸ் அதிகாரிகள் 2 பேர், ‘சாம் விங்ஸ்’ விமான நிறுவன ஊழியர்கள் 2 பேர் என 6 பேரை ஈராக் விசாரணை அதிகாரிகள் சந்தேகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை வளையத்தில் உள்ள 2 விமான நிறுவன ஊழியர்களில் ஒருவர் உளவாளி என்றும், மற்றொருவர் விமான பணிக்குழுவை சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 mins ago

உலகம்

6 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்