ஈரானின் கலாச்சாரச் சின்னங்களைத் தகர்ப்போம் என்று மிரட்டல் விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு யுனெஸ்கோ அமைப்பின் தலைவர் அட்ரே அஜோலே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எந்தவிதமான முரண்பாடுகள், போர் ஏற்பட்டாலும் கலாச்சார சின்னங்களுக்கு மதிப்பளித்து, சர்வதேச ஒப்பந்தங்களை மதித்து செயல்படுவோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளதை நினைவில் வைக்க வேண்டும் என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
ஈரான் புரட்சிகரப் படையின் தளபதி காசிம் சுலைமானை அமெரிக்க ராணுவம் கொலை செய்தது. இந்த கொலைக்குப் பழிக்குப்பழி வாங்குவோம் என்று ஈரான் அரசும் தெரிவித்திருந்தது.
இதற்குப் பதிலடி வரும் விதமாக அமெரிக்க அதிபர் ட்விட்டரில் கூறுகையில், " எங்கள் நாட்டைச் சேர்ந்த 52 நபர்களைச் சிறைபிடித்து வைத்திருக்கிறீர்கள். அதுபோல ஈரானில் உள்ள 52 முக்கியமான இடங்களை நாங்கள் குறிவைத்துள்ளோம். அமெரிக்க மக்களுக்கோ, சொத்துக்களுக்கோ சேதம் ஏற்பட்டால் அந்த 52 இடங்களை அழி்த்துவிடுவோம்" என எச்சரிக்கை விடுத்தார்.
அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் குறித்து அறிந்த ஐநாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ கடும் கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இதுகுறித்து யுனெஸ்கோ அமைப்பின் தலைவர் அட்ரே அஜோலேவை யுனெஸ்கோவுக்கான ஈரான் தூதுர் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழல் குறித்தும், அங்குள்ள கலாச்சார சின்னங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக்கள் குறித்தும் கவலை தெரிவித்தார்.
இந்த சந்திப்புக்குப்பின் யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் " அமெரிக்காவும், ஈரானும் தங்களுக்கு இடையே எந்தவிதமான முரண்பாடுகள் ஏற்பட்டாலும் தங்கள் நாடுகளில் இருக்கும் கலாச்சார சின்னங்களைப் பாதுகாப்போம், இரு நாடுகளும் கலாச்சாரச் சின்னங்களைக் குறிவைத்துத் தாக்கமாட்டோம் என்று ஒப்பந்தம் செய்துள்ளதை இரு நாடுகளின் தலைவர்களுக்கும் நினைவுபடுத்துகிறோம்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய கலாச்சார சின்னத்துக்கு எந்தவிதமான சேதங்களையும் ஏற்படுத்தக் கூடாது. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் 2017-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானம் 2347-ன்டி எந்த நாட்டின் பாரம்பரிய, கலாச்சார சின்னங்களையும் அழிக்கக்கூடாது. அவ்வாறு அழிப்பது கண்டனத்துக்குரியதாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
5 mins ago
உலகம்
9 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago