ஈரான் எதிர்க்க நினைத்தால் வெளிப்படையாகச் செய்யும்: ட்ரம்ப்புக்கு ஹசன் ரவ்ஹானி பதில்

By செய்திப்பிரிவு

ஈரான் ஒரு நாட்டை எதிர்க்க நினைத்தால் அதனை வெளிப்படையாகச் செய்யும் என்று ட்ரம்ப்புக்கு, அந்நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது ஈரான் ஆதரவுப் படையான கடாயெப் ஹிஸ்புல்லா கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, அந்தப் படையினர் மீது அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இதில், கடாயெப் ஹிஸ்புல்லா படையைச் சேர்ந்த 25 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் மீது கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் தாக்குதல் நடத்தினர். இது அமெரிக்காவை அதிர்ச்சியடையச் செய்தது.

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் , “அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஈரான் பெரிய தவறைச் செய்துவிட்டது. இதற்கு ஈரான் அரசுதான் முழுப் பொறுப்பு. தாம் செய்த தவறுக்கு அந்நாடு விரைவில் பெரிய விலையைக் கொடுக்கும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “இதற்கும் ஈரானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஈரான் ஒரு நாட்டை எதிர்க்க முடிவு செய்தால் அதனை வெளிப்படையாகச் செய்யும்.

நாங்கள் எங்கள் நாட்டின் நலனுக்காக கடுமையாக உழைக்க உறுதி பூண்டுள்ளோம் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். மேலும், எங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயலும் எவரையும் எதிர்கொள்ளத் தயங்க மாட்டோம்” என்று பதில் அளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்