பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சுவிட்சர்லாந்து டேவோஸ் பயணம்தான் கடந்த 10 ஆண்டுகளில் இதுவரையிலான பாக் பிரதமர்களின் சிக்கனமான பயணம் என்கிறது பாகிஸ்தான் அரசு தரப்புச் செய்திகள்.
உலக பொருளாதார கூட்டத்திற்கு இம்ரான் கான் மற்றும் சிலர் உடன் செல்கின்றனர், இவர்களின் மொத்த செலவே 68,000 டாலர்கள் என்கிறது செய்தித் தகவல் தொடர்புத் துறை.
இதற்கு முன்பாக நவாஸ் ஷெரீப், ஷாகித் ககான் அபாஸி, யூசப் ரஸா கில்லானி ஆகியோர் கடும் ஆடம்பரமாகச் செலவு செய்திருக்கின்றனர்.
முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீப் வெளிநாட்டுப் பயணம் ஒன்றிற்கு செலவிடும் தொகை 762,100 மில்லியன் டாலர்கள்! பாகிஸ்தான் முஸ்லிம் லீக் முன்னாள் பிரதமர் அப்பாஸி பயணம் ஒன்றுக்கு செலவிடும் தொகை 561,381 டாலர்கள். பாகிஸ்தான் மக்கள் கட்சி கில்லானி பயணம் செய்தால் நாட்டுக்கு 459,451 மில்லியன் டாலர்கள் நஷ்டம்.
இம்ரான் கான் பிரதமராகப் பதவியேற்றதுடன் அயல்நாட்டுப் பயணங்களுக்கான செலவை கடுமையாகக் குறைக்க அறிவுறுத்தினார்.
இம்ரான் கான் இதற்கு முன்பு 2 முறை அமெரிக்கா சென்றபோது 68,000 டாலர்கள்தான் செலவு என்கிறது எக்ஸ்பிரஸ் ட்ரைப்யூன்
ஆனால் முன்னாள் பிரதமர் ஷெரீப் அமெரிக்கா சென்ற போது 540,854 டாலர்கள் செலவிடப்பட்டது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான ஆசிப் அலி சர்தாரி அமெரிக்க பயணத்துக்காக 752,682 டாலர்கள் பாகிஸ்தான் அரசு பணம் செலவிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago