மத்திய கிழக்கு பகுதிகளில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை ஈரான் தொடரும்: அமெரிக்கா

By செய்திப்பிரிவு

மத்திய கிழக்கு பகுதிகளில் ஆத்திரமுட்டும் நடவடிக்கைகளில் ஈரான் தொடர்ந்து ஈடுபடக் கூடும் என்று அமெரிக்க கடற்படை செயலாளர் தாமஸ் மோட்லி தெரிவித்துள்ளார்.

ஓமன் கடல் பகுதியில் வெள்ளிக்கிழமையன்று சீனா, ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன.

அமெரிக்கா - ஈரான் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வரும் நிலையில் ஈரானுடன் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை சீனா நடத்தியுள்ளது.

இந்த நிலையில் ஈரான் நடவடிக்கைகள் குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தாமஸ் கூறும்போது, “ ஈரான் மத்திய கிழக்கு பகுதிகளில் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடக் கூடும் என்று நான் நினைக்கிறேன். அதனை செய்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பை ஈரான் பயன்படுத்திக் கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா உள்ளிட்ட (ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, சீனா) 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.

ஆனால், அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார். இதற்குப் பதிலடியாக ஈரான், அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்