அரசை எதிர்த்துப் போராடியதில் கொல்லப்பட்ட மகனுக்கு துக்கம் கொண்டாடிய பெற்றோர் கைது : ஈரானில் அதிரடி

By ராய்ட்டர்ஸ்

கடந்த நவம்பர் மாதத்தில் ஈரானில் அரசுக்கு எதிரான கடும் போராட்டங்கள் மூண்டன, இதில் பவ்யா பாக்தியரி என்பவர் 40 நாட்களுக்கு முன்னதாக கொல்லப்பட்டார். இவருக்கு வயது 26.

ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த இவருக்கு குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த விரும்பினர். ஒரு சிறு துக்க நிகழ்ச்சிதான் அதற்காக பாக்தியரியின் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் ஈரானில் கைது செய்யப்பட்டனர்.

நவம்பர் மத்தியில் நடந்த இந்தப் போராட்டங்களில் எத்தனை பேர் பலியானார்கள் என்பதை ஈரான் அரசு தரப்பு வெளியிடவில்லை, ஆனால் ஆம்னெஸ்டி இண்டெர்னேஷனல் 305 பேர் மடிந்ததாக தெரிவித்தது.

ஈரான் உள்துறை அமைச்சக அதிகாரிகள் 3 பேர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் சுமார் 1,500 பேர வரை பலியாகியிருக்கலாம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவலை மற்றொரு உள்துறை அதிகாரி ‘போலிச் செய்தி’ என்று மறுத்தார்.

இறந்தவர்களின் உடல்களையும் உரியோரிடம் ஒப்படைக்க ஈரான் அரசு மறுத்ததோடு, இறுதிச் சடங்கு பெரிய அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்று இறுதிச் சடங்குகளுக்கும் தடை விதித்ததாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த முறையும் பலியானோருக்கு இறுதி மரியாதை, அஞ்சலி செலுத்தக் கூடாது என்று இரும்புக் கரம் கொண்டு ஈரான் ஒடுக்கி வருவதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்த நிலையில் பவ்யா பாக்தியரியின் குடும்பத்தினர் பயப்படவில்லை. இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளுமாறு உறவினர்கள், நண்பர்கள், அயல்நாட்டு ஊடகத்தினருக்கு அழைப்பு விடுத்தனர்.

போராட்டங்கள் குறித்த செய்திகளுக்கு கடும் தடை உத்தரவு இருக்கும் சூழ்நிலையில் இந்த அழைப்பு பெரிய அரசியல் செயல்பாடாக பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தியையடுத்து பாக்தியரியின் தந்தை மானவ்சேர் பாக்தியரிக்கு அரசு தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டது. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை உடனே ரத்து செய்ய அவருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர், ஆனால் தந்தை மறுத்து விட்டார். இதனையடுத்து குடும்ப உறுப்பினர்களை ஈரான் அரசு கைது செய்தது.

எரிபொருள் விலையை நடு இரவில் உயர்த்தியதையடுத்து ஈரானில் போராட்டம் தொடங்கி 100 ஈரானிய நகர்களுக்கும் பரவியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

11 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்