ஆப்கானிஸ்தானை சுத்தம் செய்வதற்காக வெளிநாட்டினரை விரட்டியடிப்போம்: தலிபான்கள் மிரட்டல்

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டினரை விரட்டியடித்து நாட்டை சுத்தம் செய்வோம் என்று தலிபான் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர். கடந்த 13 ஆண்டுகளாக அமெரிக்க கூட்டுப் படையினர் (நேட்டோ) ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு தலிபான்களுக்கு எதிராகப் போரிட்டு வருகின்றனர். தற்போது அங்கு 51,000 நேட்டோ படையினர் உள்ளனர்.

வரும் டிசம்பரில் ஆப்கானிஸ் தானில் இருந்து நேட்டோ படை முழுமையாக வாபஸ் பெறப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். அதன்பின்னர் அமெரிக்க ராணுவத்தின் மிகச் சிறிய பகுதி அங்கு முகாமிட்டு ஆப்கானிஸ்தான் படைகளுக்கு பயிற்சி மட்டும் அளிக்க உள்ளது.

தலிபான் தளபதி நீக்கம்

இந்நிலையில் தலிபான் அமைப்பின் தலைமைத் தளபதி யாக செயல்பட்ட முல்லா அப்துல் குவாயூம் ஜாகீரை அந்த அமைப்பு அண்மையில் நீக்கியது. புதிய தளபதி யார் என்பது இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் தலிபான்களின் தலைமை அமைப்பு சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

அதில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டினரை விரட்டியடித்து நாட்டை சுத்தம் செய்வோம் என்று சூளுரைக்கப் பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டி னருக்கு உதவியாகச் செயல்படும் மொழிபெயர்ப்பாளர்கள், ஆட்சி யாளர்கள், நீதித் துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப் படும் என்றும் தலிபான்கள் எச்சரித்துள் ளனர்.

அரசியல் குழப்பம்

ஆப்கானிஸ்தானில் அண்மை யில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே மீண்டும் ஜூன் மாதத்தில் அதிபர் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிய அரசு பதவியேற்க வேண்டிய நிலையில் அதிபர் தேர்த லில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் ஸ்திரமற்றதன்மை நீடிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

12 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

15 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்