யு.எஸ். மீது ஓநாய் தாக்குதல்: ஏமன் அல்-காய்தா எச்சரிக்கை

By ஏஎஃப்பி

அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான ஓநாய்த் தாக்குதல் நிகழ்த்தப்படும் என்று ஏமன் நாட்டு அல்-காய்தா பயங்கரவாத இயக்கம் எச்சரித்துள்ளது.

ஏமன் நாட்டிலிருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்பான அல்-காய்தாவின் வெடிகுண்டு தயாரிப்புப் பிரிவுத் தலைவர் இப்ராஹிம் அல் அஸிரி தனது ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்கர்கள் மீது அவர்களது நாட்டுக்குள்ளேயும் வெளியேயும் ஓநாய் தாக்குதல் (திடீர் தாக்குதல்) அதிக எண்ணிக்கையில் நடத்தப்பட வேண்டும் என்று இயக்கத்தினரைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏமனில் நடந்த பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் அல்-காய்தாவின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இந்த எச்சரிக்கையை அந்த இயக்கம் வெளியிட்டுள்ளது.

மேலும், அல்-காய்தா இயக்கத்துக்கு ஏமன் அரசு உதவி வருவதாக அல்ஜஸீரா வெளியிட்டிருந்த ஆவணப்படத்துக்கு இப்ராஹிம் அல் அஸிரி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அல்ஜஸீரா கீழ்த்தரமான ஊடகவியலில் ஈடுபடுவதாகவும் குற்றம்சட்டியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்