காசாவில் ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

By செய்திப்பிரிவு

காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளின் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கூறும்போது, “ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசா பகுதியில் உள்ள அவர்கள் ராணுவ தளத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியது. இவ்வாரத்தில் மட்டும் இஸ்ரேல் குடிமக்கள் பகுதியில் நான்காவது முறையாக பாலஸ்தீனத்திலிருந்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது”என்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம் அத்துமீறி நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னரே தெரிவித்தார்.

இரு வாரங்களுக்கு முன்னர் இஸ்ரேல்- பாலஸ்தீன எல்லைப் புறத்தில் காசா பகுதியில் இரண்டு நாட்களாக இஸ்லாமிக் ஜிகாத் தீவிரவாத அமைப்புக்கும் இஸ்ரேல் படைகளுக்கும் இடையே சண்டை நடந்தன. இதில் பாலஸ்தீன தீவிரவாதக் குழுவின் முக்கியத் தளபதியான பஹா அபு அல் அட்டா கொல்லப்பட்டார். மேலும், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 34 பாலஸ்தீனர்கள் பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து போர் நிறுத்தம் அங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காசா பகுதியில் மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது இஸ்ரேல்.

முன்னதாக 1967-ம் ஆண்டு நடந்த போரில் கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குகரைப் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. ஜெருசலம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே அவ்வப்போது மோதல் வலுத்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

உலகம்

12 days ago

மேலும்