தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இலங்கையின் அதிபராக முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சரான கோத்தபய ராஜபக்ச பதவியேற்றார்.
இலங்கையின் பழமையான புத்தமத நகரான அனுராதாபுராவில் இலங்கை அதிபராக அதிகாரப்பூர்வமாக இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்றுக் கொண்டார்.
பதவி ஏற்பு விழாவில் மகிந்தா ராஜபக்சே , பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உட்பட இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கை அதிபர் தேர்தல் சனிக்கிழமை நடந்தது. சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் வாக்கு பதிவு முடிந்தவுடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. முடிவு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.
அதிபர் தேர்தலில் 54 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்று பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றி பெற்றார்.
சுமார் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை வெற்றிக் கொண்டார் கோத்தபய ராஜபக்ச.
மொத்தமுள்ள 25 மாவட்டங்களில் 16 மாவட்டங்களில் அவருக்கு ஆதரவாக வாக்குகள் கிடைத்தன. எனினும் தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளான இலங்கையின் வடக்கு மற்று கிழக்குப் பகுதிகள் அவருக்கு தோல்வியே கிடைத்தது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago