அந்நிய ஆடவர்கள் தொட்டு காப்பாற்றக்கூடாது- மகளை நீரில் மூழ்கி சாகவிட்ட தந்தை கைது

By ஏஎஃப்பி

துபாயில் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த 20 வயது பெண்ணைக் காப்பாற்ற முயன்ற இரு ஆண் மீட்பு படை வீரர்களை அப்பெண்ணின் தந்தை தடுத்ததால், அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். ஆண்கள் பெண்ணைத் தொட்டுக் காப்பாற்றுவது, அப்பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு என்பதால் அவ்வாறு தடுத்ததாக அந்தப் பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.

ஒரு பெண்ணின் சாவுக்குக் காரணமான அந்த நபரை துபாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

எமிரேட்ஸ் 24/7 என்ற தொலைக்காட்சி மற்றும் இணையதள செய்தி ஊடகம் இதுதொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

“நீரில் மூழ்கிக் கொண்டிருந்த 20 வயது பெண்ணை மீட்க இரண்டு மீட்புப் படை வீரர்கள் முயற்சி செய்தனர். அப்பெண்ணின் தந்தை அவர்களைத் தடுத்து, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்நிய ஆண்களால் தொட்டு காப்பாற்றப்படுவது அப்பெண்ணுக்கு கண்ணியக் குறைவானது.

அதற்குப் பதிலாக அப்பெண் இறந்து விடுவதே மேல் என அவர் தெரிவித்துள்ளார். அந்த மனிதரை நாங்கள் கைது செய்துள்ளோம்” என காவல் துறையின் தேடல் மற்றும் மீட்புப் பிரிவு துணை இயக்குநர் அகமது புர்கிபா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்