நான்காவது முறையாக இலங்கை பிரதமராகிறார்: ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்பு - பிரிவினை அரசியல் நடத்த கூடாது என எச்சரிக்கை

By ஏஎஃப்பி

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவி யேற்கிறார். நாட்டில் பிரிவினை அரசியல் நடத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே (66) தலைமை யிலான ஐக்கிய தேசிய கட்சி 106 இடங்களில் வெற்றி பெற்றது. தனிப் பெரும்பான்மைக்கு இது 7 இடங்கள் குறைவு என்றாலும், பிற கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் பிரதமராவது உறுதியாகிவிட்டது. இப்போது அவர் 4-வது முறையாக பிரதமர் பதவியேற்க இருக்கிறார். பதவியேற்பு விழா இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று நடைபெறும் எளிமையான நிகழ்ச்சியில் அதிபர் சிறிசேனா, ரணிலுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1993-ம் ஆண்டு முன்னாள் அதிபர் பிரேமதாசா படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் இலங்கை பிரதமராக ரணில் முதல்முறையாக பதவியேற்றார். அதன் பிறகு 2001-ம் ஆண்டு மீண்டும் பிரதமரானார். கடந்த ஜனவரியில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சிறிசேனா, ரணிலை பிரதமராக நியமித்தார். இப்போது மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகியுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரத்திலேயே அவர் பிரதமர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கொழும்பு மாவட்ட தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாக தாமதம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக பதவியேற்கவில்லை.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரணில் கூறியது: கடந்த ஜனவரி 8-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் புதிய புரட்சி ஏற்பட்டது. அந்த புரட்சிக்கு ஆதரவாகவே மக்கள் இப்போதும் வாக்களித்துள்ளனர்.

அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப நல்லாட்சி அமைப்போம். நல்லொழுக்கம் மிக்க நாட்டை கட்டி எழுப்புவோம். அனைத்து தரப்பு மக்களும் சம அந்தஸ்துடன் வாழ நடவடிக்கை எடுப்போம்.

புதிய யுகத்தில் சவால்களை எதிர்கொண்டு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவோம். வெற்றியாளர்கள், தோற்றவர்கள் என்று பிரிந்து செயல்படாமல் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாட்டில் யாரும் பிரிவினை அரசியல் நடத்தக் கூடாது என்றார்.

ராஜபக்ச அறிவிப்பு

இதனிடையே பொதுத் தேர்தல் முடிவுகளை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேர்தலில் எங்கள் கூட்டமைப் புக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்கள், கட்சிக்காக தேர்தலில் உழைத்த ஆதரவாளர் களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தலில் மக்கள் எனக்கு அளித்துள்ள கட்டளைப்படி தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன். நாட்டின் ஜனநாயகம் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி நாட்டுக்கு மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்’ என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்