வாஷிங்டன்
இந்தியாவில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஹெச்-1பி விசாவை வழங்காமல், விண்ணப்ப அளவிலேயே நிராகரிக்கும் அளவு அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவை (யுஎஸ்சிஐஎஸ்) ஆகியவற்றிடம் இருந்து பெற்ற புள்ளிவிவரங்கள் அடிப்படையில் அமெரிக்க கொள்கைகளுக்கான தேசிய அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச்-1பி விசா பெறுவதற்காக இந்திய ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றுவோர் விண்ணப்பித்தால் அதை விண்ணப்ப அளவிலேயே நிராகரிப்பது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு இந்த நிராகரிப்பு வெறும் 6 சதவீதம் இருந்த நிலையில் தற்போது 24 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவைச் சேராத வெளிநாட்டவர்களை அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் வேலைக்குப் பணியமர்த்திக் கொள்வதற்காக வழங்கப்படுவது ஹெச்-1பி விசா. இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர்.
ஆனால், அமெரிக்க வேலை அமெரிக்க மக்களுக்கே என்று அதிபர் ட்ரம்ப் வெளிப்படையாகப் பிரகடனப்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளையும், பல்வேறு புதிய விதிமுறைகளையும் விசா வழங்குவதில் கொண்டு வந்துள்ளது. இதனால், இப்போது ஹெச்-1பி விசா பெறுவது கடினமாக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள அமேசான், மைக்ரோசாஃப்ட், இன்டெல், கூகுள் ஆகிய நிறுவனங்களில் பணியாற்ற இந்தியர்கள் ஹெச்-1பி விசாவை கடந்த 2015-ம் ஆண்டு விண்ணப்பித்தபோது எளிதாகக் கிடைத்தது. ஒரு சதவீதம் மட்டுமே விண்ணப்ப அளவில் நிராகரிக்கப்பட்டது. ஆனால், 2019-ம் ஆண்டில் அமேசான் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 6 சதவீதம், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 8 சதவீதம், இன்டல் 7 சதவீதம், கூகுள் 3 சதவீதம் பேருக்கும் விசா மறுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 2 சதவீதம் விசா மறுக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக டெக் மகிந்திரா நிறுவனத்துக்குக் கடந்த 2015-ம் ஆண்டில் ஹெச்-1பி விசா விண்ணப்ப அளவிலேயே மறுப்பது 4 சதவீதம் இருந்த நிலையில், 2019-ம் ஆண்டில் 41 சதவீதமாக அதிகரித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றுவோருக்கு 2015-ம் ஆண்டில் 6 சதவீதம் விசா மறுக்கப்பட்ட நிலையில் தற்போது 34 சதவீதம் மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல விப்ரோ நிறுவனத்துக்கு விசா மறுப்பு அளவு 7 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமும், இன்போசிஸ் நிறுவனத்துக்கு 2 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, அசென்ச்சர், கேப்ஜெமினி உள்ளிட்ட 12 நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு நடப்பு நிதியாண்டில் முதல் 3 காலாண்டில் மட்டும் 30 சதவீதம் பேருக்கு விசா விண்ணப்ப அளவிலேயே மறுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று பணியாற்றும் இந்தியர்களுக்குத்தான் விசா விண்ணப்ப அளவில் மறுப்பது அதிகரித்துள்ளது. ஆனால், அமெரிக்காவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் சார்பில் ஊழியர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கு விசா மறுப்பு குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது.
குறிப்பாக அமேசான் நிறுவன ஊழியர்கள் ஹெச்-1பி விசாவுக்கு விண்ணப்பத்தில் நிராகரிப்பு அளவு ஒரு சதவீதம் முதல் 3 சதவீதமும், மைக்ரோசாஃப்ட் 2 சதவீதமும், இன்டெல் ஒரு சதவீதம் முதல் 3 சதவீதமும், ஆப்பிள் தொடர்ந்து 2 சதவீதமும் மட்டுமே இருந்து வருகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ஹெச்-1பி விசா விண்ணப்ப அளவில் நிராகரிப்பு 10 சதவீதத்துக்கு மேல் தாண்டியதில்லை. ஆனால், அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் வந்தது முதல் விசா வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகள், புதிய விதிமுறைகள் புகுத்தியது போன்றவற்றால் விசா வழங்குவதில் கட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது.
பிடிஐ
முக்கிய செய்திகள்
உலகம்
52 mins ago
உலகம்
9 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago