ஆப்கானிஸ்தான் நாட்டின் காவல்துறை முகாம் ஒன்றை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். இதனால் நூற்றுக் கும் மேற்பட்ட காவலர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத் துவிட்டு, சரணடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக தலிபான் தீவிரவாதிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், மோதல் தொடங்கி மூன்று நாட்களுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை காவலர்களின் முகாமை தலிபான் கைப்பற்றியது.
இதன் காரணமாக, தங்களின் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் சரணடைய நேரிட்டது. பிறகு தலிபானுக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
110 காவலர்கள், உள்ளூர் தளபதி மற்றும் உள்ளூர் எல்லைக் காவல்படையின் தலைவர் ஆகியோரை விடுவித்துள்ளதாக தலிபான் தெரிவித்துள்ளது.
தலிபான் தங்களின் முகாமைக் கைப்பற்றிய போது, அதனை எதிர்க்க மத்திய அரசு ராணுவத்தை அனுப்பவில்லை என்று காவலர்களில் சிலர் புகார் கூறியுள்ளனர்.
ஆனால் முகாமை அடைவ தற்கான சாலைகள் அனைத்தும் சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டிருப்பதால் உடனடி யாக உதவிக்குப் படைகளை அனுப்ப முடியவில்லை என்று காவல்துறைத் தலைவர் ஜெனரல் பாபா ஜான் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நேட்டோ படைகள் திரும்பப் பெற்ற பிறகு, அதிகளவில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் தலிபான் களிடம் சரணடைந்திருக்கும் சம்பவம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
14 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago