ஐஎஸ் தீவிரவாத தலைவர் 'கண்ணீர்விட்டு, கோழை'போல் மடிந்தார்; அல் பாக்தாதி இறந்தது எப்படி?- அதிபர் டிரம்ப் விளக்கம்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திவந்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி உயிரிழந்தார். ஒரு நாய் போன்று, கோழை போன்று கண்ணீர் விட்டு அழுது உயிரைவிட்டார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாகத் தீவிரமான கண்காணிப்பிலும், தேடுதலிலும் இருந்த அல்-பாக்தாதியை அமெரிக்க ராணுவத்தின் கே9 டாக்ஸ் ஹெலிகாப்டர் பிரிவு சனிக்கிழமை இரவு கொன்றதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி செய்துள்ளார்.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் நிறுவனத் தலைவர், அபுபக்கர் அல்-பக்தாதி. சிரியாவில் இஸ்லாமிய அரசை உருவாக்க வேண்டும், புனிதப் போர் தொடுக்க வேண்டும் என்று மூளைச்சலவை செய்து பிரச்சாரம் செய்ததால், பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான இளைஞர்கள், பெண்கள் ஐ.எஸ். அமைப்பால் ஈர்க்கப்பட்டனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை 2014 ஆம் ஆண்டு இந்த அமைப்பு, கைப்பற்றியது. இதையடுத்து, அந்த அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி இஸ்லாமியக் குடியரசை உருவாக்கி விட்டதாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன்பின் அமெரிக்கா மற்றும் கூட்டுப்படைகள் நடத்திய தொடர் தாக்குதலில் ஐஎஸ்ஐ ஸ் அமைப்பின் வசம் இருந்த பல பகுதிகள் மீட்கப்பட்டன. இருப்பினும், ஐ.எஸ்.தீவிரவாதிகள் தொடர்ந்து அமெரிக்கா வீரர்கள், கூட்டுப்படையினர் மற்றும் பல்வேறு நாடுகளில் தாக்குதல் நடத்தி வந்தனர். ஐஎஸ். தீவிரவாதிகள் தாக்குதலில் மட்டுமே உலக அளவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், நீண்ட இடைவெளிக்குப்பின் விடியோவில் தோன்றிய அல்-பக்தாதி சுமார் 18 நிமிடங்கள் பேசினார்.

ஐ.எஸ்.தலைவர் பாக்தாதி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 25 மில்லியன் டாலர் பரிசும் அமெரிக்க அறிவித்து இருந்தது.

இந்நிலையில், சிரியாவில் வடமேற்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப்பிரிவு நடத்திய தேடுதல் வேட்டையில் சனிக்கிழமை இரவு அல் பாக்தாதி அவரின் 3 மகன்கள், கூட்டாளிகள் பலர் உயிரிழந்ததாக அமெரிக்க அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிருபர்களுக்கு நேற்று வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஏறக்குறைய 3 ஆண்டுகள் தேடுதலுக்குப்பின் அமெரிக்கப் படையினருக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஆம், உலகத்தை அச்சுறுத்திவந்த ஐஎஸ். தீவிரவாத தலைவர் அல் பாக்தாதியை அமெரிக்க ராணுவத்தின் கே9 டாக்ஸ் ராணுவப் பிரிவு சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு குகையில் வைத்து கொலை செய்துள்ளது.

தப்பிச்செல்ல வேறுபாதை இல்லாத அந்த குகைக்குள் அல் பாக்தாதி, அவரின் 3 மகன்கள் உயிரைக் காத்துக்கொள்ள ஓடினார்கள். தப்பிச் செல்ல வேறு வழியில்லாததாதல், தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து உயிரிழந்தனர்.

அல் பாக்தாதி கொல்லப்பட்ட இரவு அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே சிறப்பான இரவு. உலகில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த கொடூரமான கொலைகாரர் அழிக்கப்பட்டார்.

இனிமேல் எந்த அப்பாவி மக்களுக்கும் அவரால் துன்பம் வராது. ஒரு நாயைப் போன்று, கோழையைப் போன்று அல் பாக்தாதி உயிரிழந்தார். இனிமேல் இந்த உலகம் பாதுகாப்பானதாக இருக்கும்.

அமெரிக்க ராணுவத்தின் சிறப்பு படையினர் சனிக்கிழமை இரவு மிகவும் ஆபத்தான முறையில் பாக்தாதி இருந்த இடத்தில் ரெய்டு நடத்தினார்கள். ஒரு கட்டத்தில் பாக்தாதி அமெரிக்கப் படையினரிடம் இருந்து தப்பிக்க ஒருவழிப்பாதை உள்ள குகைக்குள் ஓடினார்.

அப்போது எங்களின் ராணுவமும் துரத்தி ஓடும் போது, படைகளிடம் சிக்குவதைத் தவிர்க்கும் பொருட்டு, உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்கள். இதில் பாக்தாதியின் உடல் சிதைக்கப்பட்டது.

பாக்தாதி உயிரிழக்கும் முன் நோய்வாய்ப்பட்டவராக, பலவீனமாக இருந்தார். ஆனால், அமெரிக்கப் படைகள் துரத்தும்போது, கோழையைப் போன்று குகைக்குள் ஓடி ஒளிந்து, கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார்.

உலகத்தையே அச்சுறுத்திய ஒரு தீவிரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி, குகைக்குள் உயிரைக் காத்துக்கொள்ளத் தப்பி ஓடியதும், அச்சத்தால் கூனி குறுகியதும், அமெரிக்க படைகளைப் பார்த்து அஞ்சி அழுததும் வித்தியாசமாக இருந்தது. அதற்கான வீடியோ ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

அல்பாக்தாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்ததும் சுவர் இடித்து விழுந்தது. அதன்பின் அவரின் உடலை ராணுவத்தினர் கைப்பற்றி டிஎன்ஐ ஆய்வுக்கு உட்படுத்திக் கொல்லப்பட்டது பாக்தாதி என்று உறுதி செய்தபின் அறிவிக்கிறேன்.

அல் பாக்தாதியை பல ஆண்டுகளாக நாங்கள் தேடிவந்தோம்.கடந்த சில ஆண்டுகளாக அவரின் இருப்பிடத்தை நெருங்கி தீவிர கண்காணிப்பில் கொண்டுவந்தோம்.

அமெரிக்க ராணுவத்தின் முக்கிய நோக்கமே பாக்தாதியை உயிருடன் பிடிப்பதும், அல்லது கொலை செய்வதும்தான் பிரதானமாக இருந்தது. என்னுடைய நிர்வாகத்தின் கீழ் நாட்டின் பாதுகாப்புத்துறையின் பிரதானக் குறிக்கோள் அதுவாகத்தான் இருந்தது.

கடந்த மாதம் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின் லேடனை அமெரிக்க படைகள் கொன்றது. இப்போது உலகிற்கு அச்சுறுத்தலாக இருந்த ஐஎஸ். அமைப்பின் தலைவரைக் கொன்றுவிட்டோம். இனிமேல் உலகம் அமைதியானதாக இருக்கும்.

சிரியாவில் அமெரிக்க படைகள் நடத்தியதாக்குதலில் ஏராளமான அல்பாக்தாதி ஆதரவாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்

பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

9 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்