சிரியா குறித்த ட்ரம்ப் கடிதத்தை குப்பைத் தொட்டியில் வீசிய துருக்கி அதிபர் எர்டோகன்

By செய்திப்பிரிவு

சிரியா விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் எர்டகன் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டதாக பிபிசி செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

அக்.9 என்று தேதியிடப்பட்ட கடிதத்தில் எர்டோகனுக்கு எழுதிய கடிதத்தில், “கடுமையான மனிதராக இருக்காதீர்கள்.. முட்டாளாக இருக்காதீர்கள்” என்று கூறியிருந்தார்.

வடக்கு சிரியாவில் குர்து தலைமை படைகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தினார். ஆனால் துருக்கி அதிபர் எர்டோகன் இதனைப் பொருட்படுத்தவில்லை.

அமெரிக்கப் படைகள் சிரியாவிலிருந்து வாபஸ் பெறப்பட்டதையடுத்துதான் துருக்கி வடக்கு சிரியாவில் தாக்குதலை தொடங்கியது என்பதால் ட்ரம்ப்பின் முடிவின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

ஐ.எஸ். தீவிரவாதத்துக்கு எதிரான போரில் குர்துக்கள் தலைமையிலான சிரியா ஜனநாயகப் படைகள் அமெரிக்காவுடன் சேர்ந்து பணியாற்றியது. இந்நிலையில் வடக்கு சிரியாவில் நிலையின்மையையும் போர்ச்சூழலையும் ஏற்படுத்துவது மீண்டும் ஐ.எஸ். எழுச்சிக்கு வித்திடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் ட்ரம்ப் கடிதத்தில், “நாம் நல்ல ஒப்பந்தம் மேற்கொள்வோம். ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் விருப்பம் உங்களுக்கும் இருக்காது. துருக்கிய பொருளாதாரத்தை சீரழித்தவன் என்ற பெயரையும் நான் எடுக்க விரும்பவில்லை. மனிதவழியில் நடந்தால் வரலாறு உங்களை சாதகமான நபராகப் பார்க்கும் இல்லையேல் நல்லது நடக்காமல் போனால் உங்களை சாத்தானாகவே பார்க்கும். கடுமையாக இருக்காதீர்கள், முட்டாளாக இருக்காதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கடிதத்தைப் புறக்கணித்த எர்டோகன் இதைக் குப்பைத் தொட்டியில் வீசியதாக துருக்கிய அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

56 mins ago

உலகம்

9 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

மேலும்