தாய்லாந்து அரசின் அரிசி கொள்முதல் ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா (46) மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் 5 ஆண்டு கள் அரசியலில் ஈடுபட முடியாது என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மாற்றப்பட்ட விவகாரத்தில் யிங்லக் ஷினவத்ரா தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அரசியல் சாசன நீதிமன்றம் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா மற்றும் 9 அமைச் சர்களை பதவிநீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டது.
இந்நிலையில் விவசாயிகளிடம் இருந்து அரிசி கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடை பெற்றிருப்பதாக புதிய புகார் எழுந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்தைவிட கூடுதல் விலை கொடுத்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட் டுள்ளதாகவும், இதில் பிரதமரின் உறவினர் பெரும் ஆதாயம் அடைந் திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கு தேசிய ஊழல் தடுப்பு கமிஷன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அவர் குற்றவாளியாக தீர்ப்பு வந்தால் 5 ஆண்டுகள் அரசியலில் ஈடுபட தடை விதிக்கப்படும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
12 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago