எரிபொருள் தீரும் நிலையில் உக்ரைன் விமானம் மோதி நொறுங்கியதில் 5 பேர் பலி

By செய்திப்பிரிவு

கெயிவ் (உக்ரைன்), பிடிஐ

உக்ரைன் நாட்டு மேற்கு நகரமான எல்விவ் நகர விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு சற்று தொலைவில் எரிபொருள் தீர்ந்த நிலையில் சார்ட்டர்டு விமானம் ஒன்று மோதி நொறுங்கியதில் 5 பேர் பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.

ஆன்டனோவ் -12 என்ற இந்த விமானத்தில் 7 ஊழியர்களும் ஒரு பயணியும் பிரயாணம் செய்தனர். அப்போது எரிபொருள் தீர்ந்த நிலையில் விமானம் தரையிறங்க அனுமதி கோரி வந்தனர்.

இந்த விமானம் ஸ்பெயினின் வீகோவிலிருந்து இஸ்தான்புல் நோக்கி வந்து கொண்டிருந்தது. உக்ரைனின் எல்விவ் நகரில் எரிபொருள் நிரப்பத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் எல்விவ் விமானநிலையத்தின் ஓடுபாதையில் 1.5 கிமீ தொலைவில் இந்த விமானம் மோதி நொறுங்கியது இதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் 3 பேரை நொறுங்கிய விமானத்திலிருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE