நியூயார்க்
அமெரிக்காவுக்கு 7 நாட்கள் அரசுமுறைப் பயணமாக சென்றிருந்த பிரதமர் மோடி தனக்கு சிறப்பான வரவேற்பும், விருந்தோம்பலும் செய்த அமெரிக்க மக்களுக்கும், அதிபர் ட்ரம்புக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தன்னுடைய இந்த பயணம் மிகுந்த நம்பிக்கை அளித்துள்ளதாகவும், இந்தியாவின் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதாக அமையும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு 7 நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி கடந்த 21-ம் தேதி சென்றார். முதலில் ஹூஸ்டன் நகரில் அமெரிக்க இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட ஹவுடி மோடி நிகழ்ச்சியில் ஒரேமேடைசியில் அதிபர் ட்ரம்புடன் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார்.
அதன்பின் நியூயார்க் சென்ற பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார், பல்வேறு நாடுகளின் தலைவர்கள், முதலீட்டாளர்கள் சந்தித்துப் பேசினார். இறுதியாக நேற்று ஐநா பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றி தனது பயணத்தை பிரதமர் மோடி நிறைவு செய்தார்.
தன்னுடைய அமெரிக்க பயணம் குறித்தம், அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்தும் பிரதமர் மோடி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
" இந்தியா-அமெரிக்கா உறவு இதயங்களை இணைத்து வைத்திருக்கிறது. ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். என்னை மேலும் சிறப்புக்குரியதாக்கிவிட்டது. மக்களின் இந்த அன்பு தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா மக்களுடன் அமெரிக்காவின் உயர்ந்த மதிப்பான விஷயங்கள் கலந்திருப்பதை வெளிப்படுத்தியது.
அமெரிக்காவில் இருக்கும் மிகச்சிறந்த தொழில்துறை தலைவர்களுடன் நடந்த வட்டமேசை மாநாடு எனக்கு சிறப்பானதாக அமைந்தது. இந்தியாவுக்கு அதிகமான முதலீட்டை கொண்டுவந்துள்ளது. உலகளவில் இந்தியாவின் சீர்த்திருத்தங்களையும், இலக்குகளையும் அறிய முடிந்தது.
ஹூஸ்டனில் உள்ள தொழில்துறை தலைவர்கள், நிறுவனங்களின் தலைவர்களுடன் எனது சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது. இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
ஐநாவில் எனது பேச்சின்போது, இந்தியாவில் செய்யப்பட்டு வரும் சுகாதார திட்டங்கள், காலநிலைமாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகள், தீவிரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்வதற்கான நேரம் ஆகியவற்றை வலியுறுத்தினேன்.
இந்த பூமியை இன்னும் அமைதியாகவும், செழிப்பாகவும், ஒற்றுமையாகவும் வைத்திருக்க இந்தியா செய்ய இருக்கும் பணிகளைப் பற்றி பகிர்ந்து கொண்டேன்
நான் சென்ற இடங்களில், சந்தித்த உலகத் தலைவர்கள், தொழில்துறை தலைவர்கள், மக்கள், அனைவரிடம் இருந்து மிகப்பெரிய ஊக்கம், உற்சாகம் ஆகியவை இந்தியாவை நோக்கி இருக்கிறது என்பதை அறிந்தேன். இந்தியாவில் சுகாதார மேம்பாடு, கழிவறை வசதி, வறுமை ஒழிப்பு போன்றவற்றுக்கு உலக அளவி்ல மரியாதையும், ஊக்கமும் அளிக்கப்பட்டது
அமெரிக்க மக்கள் எனக்கு சிறந்த வரவேற்பையும், இனிமையான விருந்தோம்பலையும் வழங்கினார்கள். அதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க எம்.பி.க்கள், அரசுக்கும் எனது நன்றிகள்
இவ்வாறு பிரதமர்மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்
, பிடிஐ
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago