சிவில் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா, இலங்கை பிரதிநிதிகளிடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக் கூட்டம் கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
இந்திய அரசு தரப்பில் வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் அமன்தீப் சிங் கில் தலைமையிலான குழுவினரும், இலங்கை தரப்பில் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறை அமைச்சக செயலாளர் தாரா விஜயதிலகே தலைமையிலான குழுவினரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விரிவான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கான வரைவு அறிக்கை குறித்து விவாதிக் கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைக் கூட்டம் சுமுகமாக நடைபெற்றதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை இந்த ஆண்டு இறுதியில் நடத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
10 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago