இந்தியாவுக்கு ஜிஎஸ்பி வர்த்தக சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்: அதிபர் ட்ரம்பிடம் அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்


இந்தியாவுக்கு ரத்து செய்யப்பட்ட வளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜிஎஸ்பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்பிடம் குடியரசு கட்சி, ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் 44 பேர் வலியுறுத்தியுள்ளார்கள்.

ஜிஎஸ்பி வர்த்தக சலுகை(Generalized System of Preferences (GSP) ) என்பது வளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தகச் சலுகையாகும். இந்தியா, அமெரிக்கா இடையிலான மிகப்பழமையான வர்த்தகச் சலுகையாக இருந்து வந்தது.

இந்த சலுகை மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் ஆட்டோமொபைல், தோல் பொருட்கள், ஜவுளி உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கும் திட்டமாகும். இந்த சலுகை குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே அமெரிக்க வழங்கி வந்தது. அதில் இந்தியா ஒன்றாகும்.

கடந்த 2017-ம் ஆண்டு மட்டும் இந்தியாவுக்கு 2 ஆயிரம் வகையான பொருட்களுக்கு ஏறக்குறைய அமெரிக்கா 570 கோடி டாலர் வரிச்சலுகை அளித்திருந்தது.

ஆனால், கடந்த மார்ச் மாதம் திடீரென இந்த சலுகையை ரத்து செய்து அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு வரி செலுத்த வேண்டிய நிலைக்கு அமெரிக்க வர்த்கர்கள், நிறுவனங்கள் தள்ளப்பட்டதால் கவலையடைந்தனர்.

இதையடுத்து, குடியரசு கட்சியைச் சேர்ந்த 18 எம்.பி.க்கள், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 26 எம்.பி.க்கள் ஆகியோர் அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்திடம் இந்தியாவுக்கு ரத்து செய்யப்பட்ட ஜிஎஸ்பி வர்த்கச் சலுகையை திரும்பி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்கள்.

ஹூஸ்டன் நகரில் வரும் 22-ம் தேதி பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் சந்தித்துப் பேசுகின்றனர். அப்போது இரு நாடுகளுக்கு இடையே நீண்டநாட்களாக நிலுவையில் இருக்கும் வர்த்தகப் பிரச்சினைகள், குறிப்பாக ரத்து செய்யப்பட்ட ஜிஎஸ்பி சலுகை உள்ளிட்டவை குறித்து பேசப்படும் எனத் தெரிகிறது.

இதுதொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்டிஸருக்கு 44 எம்.பி.க்களும் கடிதம் எழுதியுள்ளார்கள். அந்த கடிதத்தில் இந்தியா, அமெரிக்கா இடையிலான நிலுவையில் உள்ள வர்த்தக பிரச்சினைகளை விரைந்து தீர்க்க வேண்டும். குறிப்பாக அமெரிக்க தொழிற்சாலைகளுக்கு நலம் விளைவிக்கும், வர்த்தக விஷயங்களையும், ஜிஎஸ்பி சலுகையைம் பேசி தீர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் எம்.பி.க்கள் குறிப்பிடுகையில், " இந்தியாவுக்கு ஜிஎஸ்டி வர்த்தகச் சலுகையை ரத்து செய்துவிட்டதால், அமெரிக்காவில் உள்ள ஏராளமான நிறுவனங்களுக்கு வேலையிழப்பும், பொருட்கள் இழப்பும் ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்பி ரத்து செய்யப்பட்டதால் இந்தியாவில் அதிகமான வரியுடன் பொருட்களை இறக்குமதி செய்யவேண்டியது இருக்கிறது.

ஜிஎஸ்பிக்குள் வரும் பொருட்கள் இறக்குமதி கடந்த ஆண்டு ஜூன் ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், அதிகவரி காரணமாக இந்தியாவைத் தவிர்த்து சீனாவின் பக்கம் வர்த்தகர்கள் திரும்புகிறார்கள்.

இந்தியாவுக்கு ஜிஎஸ்பி சலுகை ரத்து செய்யப்பட்டதால், நாள் ஒன்றுக்கு அமெரிக்க நிறுவனங்கள் 10 லட்சம் டாலர்கள் வரியாகச் செலுத்த வேண்டியது இருக்கிறது. இதனால், ஜூலை மாதத்தில் மட்டும் அமெரிக்க நிறுவனங்களுக்கு 3 கோடி டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆதலால், இந்தியாவுக்கு வழங்கப்பட்டு இருந்த வர்த்தக ரீதியான சலுகையான ஜிஎஸ்பியை மீண்டும் வழங்கக் கோருகிறோம். இதற்கான பேச்சு நடந்து வந்தால், விரைவாக நடத்தி தீர்வு காண வலியுறுத்துகிறோம். இந்தப் பேச்சுவார்த்த தாமதத்தால் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கிறது. வேலைவாய்ப்பை சீராக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் 2-வது முறையாக வந்துள்ள அரசுடன் பேச்சு நடத்தி நிலுவையில் உள்ள அனைத்து வர்த்தகரீதியான பிரச்சினைகளையும் நிரந்தரமாக தீர்க்க வழிகாண வேண்டும், அமெரிக்க நிறுவனங்கள், பணியாளர்களுக்கான சந்தையை மேம்படுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்