எஸ்கலேட்டரில் சிக்கி பலியான சீனப் பெண்மணி தன் 2 வயது மகனை காப்பாற்றினார்

By ஏபி

சீனாவின் ஜிங்ஸூ நகரின் ஷாப்பிங் மால் ஒன்றில் எஸ்கலேட்டரில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். ஆனால் தனது 2 வயது மகனின் உயிரை கடைசி நேரத்தில் காப்பாற்றினார்.

ஞாயிறன்று நடந்த இந்த கொடூர சம்பத்தின் போது, எஸ்கலேட்டரின் மேல்புறம் வந்த பிறகு வெளியே வர காலைவைக்கும் போது கால் வைத்த இடம் உடைந்து விழுந்தது. இதனால் அவர் ரோலாகி கொண்டிருந்த எஸ்கலேட்டரில் சிக்கி பலியானார், ஆனால் தனது 2 வயது மகனை சிக்காமல் வெளியே தள்ளிவிட்டு உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

எஸ்கலேட்டரின் மேற்பகுதியில் நின்று கொண்டிருந்த ஷாப்பிங் மால் கடைக்கார ஊழியர்கள் இருவரிடம் மகனை தள்ளிவிட்டார். உதவியாளர்கள் இவரையும் காப்பற்ற முயற்சி செய்து இழுத்துப் பார்த்தனர், ஆனால் இயக்கத்திலிருந்த எஸ்கலேட்டர் அவரை உள்ளுக்குள் இழுத்துவிட்டது. இவையெல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது.

4 மணி நேரம் கழித்தே இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பரிதாபமாக பலியான பெண்ணி பெயர் சியாங் லிஜுவான். வயது 30.

2012-ம் ஆண்டு பெய்ஜிங்கில் செயின் ஸ்டோர் ஒன்றில் 9 வயது சிறுவன் ஒருவர் எஸ்கலேட்டரில் சிக்கி பலியாகியுள்ளார்.

2011-ம் ஆண்டில் பெய்ஜிங் சப்-வே நிலையம் ஒன்றில் இருந்த எஸ்கலேட்டரின் சுழலும் பாதை திடீரென தலைகீழாக அதில் 13 வயது சிறுவன் ஒரு பலியாகி, 29 பேர் காயமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்