ஆப்கனில் 2 இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல்- 9 பேர் பலி; 60 பேர் படுகாயம்

By ஏஎஃப்பி

ஆப்கானிஸ்தானில் இரண்டு இடங்களில் நேற்று தற்கொலைப் படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர்.

தெற்கு ஆப்கானிஸ்தானின் லஷ்கர் காஹ் பகுதியில் அந்தப் பிராந்திய போலீஸ் தலைமை அலுவலகம் உள்ளது. அந்த அலு வலகத்துக்கு நேற்று வெடிகுண்டு கள் நிரப்பிய லாரியை ஓட்டி வந்த தற்கொலைப் படை தீவிரவாதி வாயிலில் மோதி வெடித்துச் சிதறினான். இதில் அப்பகுதியாக நடந்து சென்ற பொதுமக்களில் 2 பேர் உயிரிழந்தனர். போலீஸார் உட்பட சுமார் 40-க்கும் மேற்பட் டோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் முதல்கட்ட விசாரணையில் தலிபான் தீவிரவாதிகள் தாக்கு தலை நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க ராணுவ ராணுவ வாகன அணிவகுப்பை குறிவைத்து வெடிகுண்டுகள் நிரப்பிய காரில் வந்த தற்கொலைப் படை தீவிரவாதி மோதினான். இதில் 7 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

முன்னதாக தலைநகர் காபூலில் நேற்று காலையில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் வெடிகுண்டு கள் வெடித்தன. இதில் உயிரிழப்பு ஏற்படவில்லை. 2 குழந்தைகள் காயமடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்