குழந்தையின் உடலில் வெடிகுண்டை கட்டி வெடிக்கச் செய்து, ஆயுத சோதனையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வீரரின் குழந்தையை ஆயுத சோதனைக்கு பயன்படுத்திய இந்தச் சம்பவம் கடந்த வாரம் நடந்ததாக இராக் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் சாதிக் அல் ஹுசைனி தெரிவித்துள்ளார்.
இராக்கின் தியாலா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஐ.எஸ் பயங்கரவாதிகள் அவர்களது பயிற்சி முகாமில் வழக்கமான ஆயுத சோதனை செய்தது ஐ.எஸ். குழு. போராளிகளுக்கு வெடிகுண்டுகளை செயல்படுத்தும் முறை குறித்து விளக்கம் காண்பிக்கப்பட்டபோது, குழந்தையின் உடலில் வெடிகுண்டுகளை கட்டிவிட்டு தொலைவிலிருந்து ரிமோட் மூலம் அதை வெடிக்கச் செய்ததாக சாதிக் அல் ஹுசைனி தெரிவித்தார்.
இதில் அந்தக் குழந்தை உடல் சிதறி பலியானது. பல படுகொலைகளை செய்து வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செயல் தற்போது உச்சக் கட்டத்தை அடைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளையும் பலியாக்கி கொண்டிருக்கிறது.
சிரியா மற்றும் இராக்கில் சன்னிப் பிரிவு பயங்கரவாதிகள், ஷியா பிரிவினரை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களது கட்டுப்பாட்டில் பல மாகாணங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago