சீன கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் லிங் ஜிகுவா (58) ஊழல் குற்றச் சாட்டுகள் காரணமாக கைது செய்யப்பட்டார்.
சீன முன்னாள் அதிபர் ஹூ ஜிண்டாவோ ஆட்சியின்போது அவரின் தலைமை ஆலோசகராக லிங் ஜிகுவா செயல்பட்டார். 2007 முதல் 2012 வரை அவர் கட்சியின் மத்திய கமிட்டி இயக்குநராக இருந்தார்.
அவர் அதிகாரத்தில் இருந்த போது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதாகவும் அரசு மற்றும் கட்சி ரகசியங்களை கசியவிட்டதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இவை தொடர்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் குழு விசாரணை நடத்தியது. இதில் லிங் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் அவர் கைது செய்யப்பட்டார். அதேநாளில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
சீனாவில் கடந்த 2002 முதல் 2012 வரை பத்து ஆண்டுகள் ஹூ ஜிண்டாவோ அதிபராக இருந்தார். அவருக்குப் பிறகு ஜி ஜின்பிங் அதிபராக பதவியேற்றார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் படிப்படி யாக ஓரம் கட்டப்பட்டனர்.
அந்த வரிசையில் லிங் ஜிகுவா இப்போது நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago