மாஸ்கோ,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை ரத்து செய்தது, மாநிலத்தை இரண்டாகப் பிரித்தது போன்றவற்றில் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்ய அரசு கருத்து தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது.
இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதியது. சர்வதேச சமூகத்தின் உதவியையும் பாகிஸ்தான் கோரி அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பேசி வருகிறது.
இந்தியாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியத் தூதரையும திருப்பி அனுப்பி, வர்த்தக உறவையும் தற்காலிகமாக ரத்து செய்தது.
மேலும், சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜோத்பூர் கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றையும் ரத்து செய்தது பாகிஸ்தான். இறுதியாக டெல்லி, லாகூர் இடையே சென்ற பஸ் போக்குவரத்தையும் நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தியது.
இதனால் ஜம்மு காஷ்மீர் மற்றும் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த ரஷ்ய அரசு இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது.
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், " உண்மையான தகவல்களை ஆய்வு செய்ததில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை இந்திய அரசு ரத்து செய்ததும், அந்த மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்ததும், அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இந்திய அரசு செய்துள்ளது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பின் அதை சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைதியாகப் பேசித் தீர்க்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, இரு மாநிலங்களாகப் பிரித்தது போன்ற காரணங்களை வைத்து, எந்தவிதமான மோசமான சூழலும் தங்கள் பிராந்தியத்தில் உருவாவதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் அனுமதிக்கக் கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிஐ
முக்கிய செய்திகள்
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago