நைஜீரிய நகரமான ஜோஸில் மசூதி மற்றும் உணவு விடுதியில் நிகழ்ந்த 2 பயங்கரக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 44 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்லாமிய போகோஹராம் அமைப்பே இதற்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஞாயிறன்று (நேற்று) பெண் தீவிரவாதி தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் போட்ஸ்கும் நகர சர்ச்சில் 5 பேர் பலியான சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த பயங்கர தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
மேலும் நேற்று தீவிரவாதிகள் நைஜீரிய வட-கிழக்கு கிராமங்களில் நடத்திய தாக்குதல்களில் 9 கிராமத்தினர் பலியாக, சுமார் 32 சர்ச்கள் தீக்கிரையாகின. ஆனால் ராணுவம் 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது.
இந்த வாரத்தில் மட்டும் போகோஹராம் தீவிரவாத தாக்குதலுக்கு 250 பேர் பலியாகியுள்ளனர். இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாத அமைப்பின் மேற்கு ஆப்பிரிக்க கிளையாக போகோஹராம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தன்னை அறிவித்துக் கொண்டது.
இந்நிலையில் மசூதி மற்றும் உணவு விடுதித் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டு மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர்.
சர்வமத சகிப்புத்தன்மை பேசிய மசூதியில் தாக்குதல்:
ஜோஸ் நகரின் யண்டாயா மசூதியில் தலைமை மதகுரு ஸானி யஹாயா அனைத்து மதத்தினரும் இணைந்து வாழும் சன்மார்க்க நெறியைப் போதித்துக் கொண்டிருக்கும் போது போகோ ஹராம் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதாக தப்பிப் பிழைத்தவர்கள் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை உடையில் வந்த ஒருவர் மதகுரு யஹாயாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார் என்றும் பிறகு தன்மீதுள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார் என்றும் இதில் யஹாயா காயமின்றி தப்பினார் என்றும் நேரடி சாட்சி ஒருவர் அசோசியேட்டட் பிரஸ் நிருபரிடம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “யஹாயா ஒரு மிகப்பெரிய இஸ்லாமிய பண்டிதர், இவர் போகோஹராமுக்கு எதிராக பேசிவருபவர். அதனால் அவரைக் கொலை செய்ய இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கருத இடமுண்டு” என்றார்.
மற்றொரு குண்டு ஷாகாலிங்கு உணவு விடுதியில் வெடித்துள்ளது. உணவு விடுதி முற்றிலும் சேதமடைந்துள்ளது, பலர் காயமடைந்து ரத்தம் தோய்ந்த உடலுடன் வெளியே வந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
4 mins ago
உலகம்
4 mins ago
உலகம்
1 hour ago
உலகம்
3 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago