டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி
அடுத்த ஆண்டு நவம்பரில் நடக்கும் அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் தோற்றுப் போய் மூட்டையைக் கட்டிக் கொண்டு கிளம்பி விடுவார் என யாராவது நினைத்தால் அவர்கள் கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள் என்றுதான் நினைக்க வேண்டியது இருக்கும். அதற்காக அவர் அரசியல் ரீதியாக பலவீன மாக இல்லை என்றோ உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகளில் சூரர் என்றோ அர்த்தம் இல்லை. அத்தனை குளறுபடிகளுக்கு மத்தியிலும் தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் வலுவாக இருக்கிறார். குடியரசுக் கட்சியில் அவருக்குப் போட்டியாக யாருமே இல்லை. பொதுவாக அதிபராக இருக்கும் யாரையும் எதிர்த்து கட்சியில் யாரும் போட்டியிடுவது இல்லை என்பதுதான் அமெரிக்காவின் வழக்கம்.
அதிபர் ட்ரம்புக்கு சாதகமான விஷயம் என்னவென்றால், ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் 20 பேர் களத்தில் இருக்கின்றனர். தேர்தலையொட்டி இவர்களில் ஒருவர்தான் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தேர்வு செய்யப்படுவார். ஆனால் அதற் குள் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஏகப்பட்ட பின்னடைவு களை சந்திக்க நேரிடும். ஜனநாயகக் கட்சி சார்பில் களத்தில் உள்ள வேட்பாளர்களுக்கு இடையே இது வரை நடந்த இரண்டு மூன்று விவாதங்களை உற்றுக் கவனித் தாலே, அவை ட்ரம்புக்கு எந்த அளவுக்கு சாதகமாக முடியும் என்பது தெரியும். இக் கட்சி வேட்பாளர்களின் அரசியல் பின்னணியைப் பார்த்தால் மிதவாதி, இடதுசாரி, புரட்சியாளர் என வகைப்படுத்தி விடலாம். இவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் போட்டியில் இருந்து இப்போதே விலகினால், கட்சிக்கு ஏற்படும் பெரும் பாதிப்பைத் தடுத்து விடலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலைப் பொருத்தவரை அதிக வயது ஒரு பிரச்சினையே இல்லை. ஜனநாயகக் கட்சியின் பெர்னி சாண்டர்ஸ் அடுத்தாண்டு நடக்கும் தேர்தலில் வெற்றி பெற்றால், 80 வயது ஆனவர் அதிபர் ஆவார். ஒபாமா அதிபராக இருந்தபோது, துணை அதிபராக இருந்து, தற்போது பிரச்சாரத்தில் முன்னணியில் இருக்கும் ஜோ பிடெனுக்கு அடுத்தாண்டு 79 வயதாகும். ட்ரம்பும் ரொனால்டு ரீகனும் வெள்ளை மாளிகையில் நுழைந்தபோது அவர்களுக்கு வயது 79. ரீகன் இரண்டு முறை அதிபராக இருந்தவர். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஹில்லரி கிளிண்டன் வெற்றி பெற்றிருந்தால், 69 வயதில் அதிபரானவர் என்ற பெயர் கிடைத்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை.
வயது பிரச்சினையே இல்லை என்றால் அப்போது என்னதான் பிரச்சினை ஜனநாயகக் கட்சியில். ஏறக்குறைய 2 டஜன் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஜோ பிடெனை கண்மூடித்தனமாகக் தாக்குவதுதான் பிரச்சினையே. ஒபாமா அதிபராக இருந்தபோது எடுத்த நடவடிக்கைகளையும் அவரது கொள்கைகளையும் தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார்கள் இவர்கள். ட்ரம்ப் அதிபரான பிறகு, ஒபாமாவின் கொள்கைகளை குறிப்பாக குடியுரிமை மற்றும் மருத்துவக் காப்பீடு கொள்கைகளை மோசமாக விமர்சனம் செய்தாலும், ஒபாமா பதவி விலகியபோது, நல்ல பெயர்தான் அவருக்கு இருந்தது. இப்போது ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஜோ பிடெனை மட்டம் தட்டும் விதமாக ஒபாமா கொள்கைகளை விமர்சனம் செய்தால், அது ட்ரம்புக்கு ஆதரவாகத்தான் முடியும்.
வரும் 2020 அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற இரண்டு விஷயங்களைச் செய்தால் போதும். கட்சியின் மூத்த தலைவர் களை விமர்சனம் செய்வதைக் குறைத்துவிட்டு, குடியரசுக் கட்சி மீதான தாக்குதல்களை அதிகரிக்க வேண்டும். அடுத்ததாக, 2016-ம் ஆண்டு செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது. அப்போதைய தேர்தலில் ட்ரம்ப் எல்லாம் நமக்கு போட்டியா என்ற ஆணவத்தில், அதீத நம்பிக்கையோடு பிரச்சாரம் செய்ததால்தான் ஜனநாயகக் கட்சி தோல்வியைத் தழுவியது என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த அதிபர் தேர்தலில் ட்ரம்ப் உண்மையிலேயே பலமான வேட்பாளராக இருக்கிறார். குடியுரிமை பிரச்சினை, மருத்துவக் காப்பீடு, வர்த்தகம், வரி விதிப்பு என பல அஸ்திரங்களைக் கையில் எடுக்கிறார். இதெல்லாம் போக, தனது கூடாரம் பெரிதும் விரும்பக் கூடிய இனவெறியை, வெறுப்பு அரசியலை, மாற்றுக் கருத்துடையோர் மீது சகிப்புத்தன்மை இல்லாமல் தாக்குதல் நடத்துவது போன்றவற்றை போகும் இடமெல்லாம் செய்து வருகிறார் ட்ரம்ப்.
-டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி
எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இதழியல் துறை பேராசிரியர் மற்றும் வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.
தமிழில்: எஸ்.ரவீந்திரன்
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago