சீனாவில் தீவிரவாத குற்றச்சாட்டில் கைதான இந்தியர் விடுவிப்பு

சீனாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுக்களின் வீடியோக்களை பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்தியர் விடுவிக்கப்பட்டு, சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

தென் ஆப்பிரிக்க சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்த குழுவிலிருந்து 20 பேர் 47 நாள் சுற்றுலா பயணமாக சீனா சென்றிருந்தனர். அவர்கள் தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இன்னர் மங்கோலியா நகரமான எர்டாஸ் நகர விமான நிலையத்தில் கடந்த 10-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்தியர் உள்ளிட்ட 20 வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் பிரச்சார வீடியோவை பார்த்துக்கொண்டிருந்ததாக சீன அதிகாரிகள் குற்றம்சாட்டு அவர்களை தீவிரவாத பின்னணி கொண்டவர்களாக கூறி கைது செய்தனர்.

விசாரணைக்குப் பிறகு 11 பேரை மட்டும் விடுவிக்க சீன போலீஸார் முன் வந்த நிலையில் இந்தியரை விடுவிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த தொழிலர்திபர் குல்ஷேர்ஷ்தா என்று கண்டறியப்பட்ட இந்தியர் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை விடுவிக்கப்பட்டார்.

விடுவிக்கப்பட்ட அவர் பெய்ஜிங்கிலிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருடம் மற்ற 19 வெளிநாட்டவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE