சிரியாவில் வான்வழித் தாக்குதலால் கட்டிடங்களுக்கு இடையே சிக்கிக் கொண்ட தனது தங்கையை காப்பாற்றிய 5 வயது சிறுமி உயிரிழந்தது அந்நாட்டில் நெகிழ்வாக பேசப்படுகிறது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கடைசி கட்டுப்பாட்டு பகுதியான இட்லிப் மாகாணத்தில் ரஷ்யாவும், சிரியாவும் கடந்த பத்து நாட்களாக கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில் கடந்த புதன் கிழமையன்று இட்லிப் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பலியாகினர். இதில் 3 குழந்தைகளும் அடங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கட்டடம் இடிந்து விழுந்து சரிந்தது. 5-வது தளத்தில் இருந்த சிறுமி நிஹாம் என்பவரின் குடும்பத்தில் தாய் அஸ்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி பாதி உடல் வெளியே தெரிய உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி ரிஹாம், கீழே விழ இருந்த, தனது 7 மாதமே ஆன தங்கை துகா-வின் சட்டையை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதனால் அந்தக் குழந்தை கீழே விழாமல் உயிர் பிழைத்தது.
மனைவியை பறிகொடுத்து, இரு குழந்தைகளும் உயிருக்குப் போராடுவதைக் கண்டும் காப்பாற்ற முடியாமல் கீழே நின்றபடி கதறி அழுகிறார் தந்தை. இந்தக்காட்சி ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த குண்டுவெடிப்பில் சிறுமியால் காப்பாற்றப்பட்ட 7 மாத குழந்தை பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. ஆனால் உயிர்போகும் மரண அவஸ்தையிலும் தனது தங்கையை விழாமல் கெட்டியாக பிடித்து காப்பாற்றிய சிறுமி ரிஹாம், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஆசாத் அமைப்புக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.
இதில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இதில் சிரியாவின் வடகிழக்குப் பகுதியான இட்லிப் மாகாணம் மட்டும் கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ளது. இதனை மீட்க அரசுப் படைகள் ரஷ்யாவுடன் இணைந்து கடுமையாகப் போரிட்டு வருகின்றன.
முக்கிய செய்திகள்
உலகம்
19 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago