சவுதி அரேபியாவின் தெற்கில் உள்ள காமிஸ் முஷைத் நகரில் தன்னை காட்டிக் கொடுத்த தந்தையை சுட்டுக் கொன்ற தீவிர வாதியை போலீஸார் அடுத்த சில நிமிடத்திலேயே சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து அந்நாட்டு உள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தீவிரவாதி என தேடப்பட்ட ஒருவரை கைது செய்வதற்காக செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணிக்கு பாதுகாப்புப் படையினர் அவரது வீட்டுக்குச் சென்றனர். அப்போது, அந்த நபர் தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றார். இதையடுத்து, அவரை நோக்கி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக போர் தொடுத்துள்ள ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய சன்னி பிரிவினர் சமீப காலமாக சவுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஒரு மசூதியில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். 3 போலீஸாரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் பலரை அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஓராண்டில் தீவிரவாத தாக்கு தல் நடத்த சதித்திட்டம் தீட்டிய மற்றும் தீவிரவாத அமைப்புகளில் சேர்வதற்காக இராக், சிரியா, யேமனுக்கு செல்ல முயன்ற நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago