ஆப்கானிஸ்தானின் ஹீரோ என்றழைக்கப்பட்ட ராணுவ வீரர் எஸா கான் விபத்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாடாளு மன்றம் மீது கடந்த ஜூன் 22-ம் தேதி தலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஒரு தற்கொலைப் படை தீவிரவாதி, நாடாளுமன்ற வாயிலில் மோதி வெடித்துச் சிதறினான்.
அதைத் தொடர்ந்து 6 தீவிரவாதிகள் வளாகத்துக்குள் புகுந்து தானியங்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். கையெறி குண்டுகளை நாலாபுறமும் வீசினர். இதில் 19 பேர் காயமடைந்தனர்.
தற்கொலைப் படை தீவிரவாதிகளை எதிர்கொள்ள ராணுவ வீரர்கள் தயங்கிய நிலையில் எஸா கான் என்ற வீரர் தனி ஆளாக போராடி 6 வீரர்களையும் சுட்டுக் கொன்றார்.
அவரது வீரத்தை பாராட்டி அதிபர் அஷ்ரப் கனி, அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை பரிசாக அளித் தார். ஒரு தொழிலதிபர் கார் வழங்கினார். பல்வேறு எம்.பி.க்கள் வெகுமதிகளை அளித்தனர். நாட்டு மக்கள் அவரை ‘ஹீரோ’ என்று பெருமிதத்துடன் அழைத்தனர்.
இந்நிலையில் தனக்கு பரிசாக கிடைத்த காரை காபூல் சாலையில் ஓட்டிச் சென்ற எஸா கான் எதிர் பாராதவிதமாக ஒருவர் மீது மோதி னார். இதில் அவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago