வடகொரியாவில் கடந்த 4 ஆண்டுகளில் 70 அதிகாரிகளுக்கு மரண தண்டனை

By ஏபி

வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்று 4 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை 70 அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் தனது சர்வாதிகார தந்தையை மிஞ்சி உள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்கொரிய தலைநகர் சியோ லில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் யுன் ப்யுங்-சே பேசும் போது, “வட கொரியா அதிபராக கிம் ஜாங் இல் பதவியேற்ற ஓராண் டில் 10 அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவரது மறைவுக்குப் பிறகு கடந்த 2011-ல் அதிபராக பொறுப்பேற்ற அவரது மகன் கிம் ஜாங் உன், இதுவரை 70 அதிகாரிகளை தூக்கி லிட உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

இந்தத் தகவலை தென்கொரியா வின் தேசிய புலனாய்வு சேவைப் பிரிவின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். ஆனால் இந்தத் தகவல் எப்படி கிடைத்தது என்ற விவரத்தை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

கடந்த 1948-ம் ஆண்டிலிருந்து வடகொரியாவை கிம் குடும் பத்தினர் ஆட்சி செய்து வரு கின்றனர். அப்போதிலிருந்தே அந்நாட்டு அரசின் செயல்பாடு களும் செய்திகளும் ரகசியமாக உள்ளன.

சில தகவல்களை தென் கொரிய புலனாய்வுப் பிரிவு சேகரித்து வெளியிட்டு வருகிறது. ஆனால் அதை உறுதிப்படுத்த முடிவதில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 min ago

உலகம்

1 min ago

உலகம்

1 hour ago

உலகம்

3 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்