சீனாவில் ஆப்கன் - தலிபான் பேச்சுவார்த்தை

By ஏஎஃப்பி

ஆப்கானிஸ்தான் அரசு தலிபான் தீவிரவாதிகள் இடையிலான 2-வது சுற்று பேச்சுவார்த்தையை சீனாவில் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிகிறது.

அமைதி பேச்சு நடத்த ஆப்கானிஸ்தான் அரசு அமைத் துள்ள குழுவின் உறுப்பினர் முகமது இஸ்மாயில் குவாசிம் யார் இது தொடர்பாக கூறியது: ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையிலான 2-வது சுற்று பேச்சுவார்த்தை வரும் 30 மற்றும் 31-ம் தேதிகளில் நடை பெறவுள்ளது. இந்த பேச்சு வார்த்தை அனேகமாக சீனாவில் நடைபெற வாய்ப்புள்ளது என்றார்.

அதே நேரத்தில் அமைதி பேச்சு வார்த்தை குழுவின் துணைத் தலைவர் அப்துல் காகிம் முஜாஹித் இதனை உறுதிப் படுத்த மறுத்துவிட்டார். பேச்சு வார்த்தை நடத்தும் இடம் இன்னும் இறுதி செய்யப்பட வில்லை. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தும் இடத்துக்கான பரிசீலனையில் உள்ளன என்று அவர் கூறினார்.

முன்னதாக முதல் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் சுற்றுலா நகரமான மூரியில் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்