அமெரிக்காவின் வர்த்தக விண்கலத்தில் பயணம்: சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 விண்வெளி வீரர்கள் தேர்வு

By ஐஏஎன்எஸ்

அமெரிக்கா சார்பில் வர்த்தக ரீதியில் புதிதாக தயாராகும் விண் கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர் சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேரை நாசா தேர்வு செய்துள்ளது.

சர்வதேச விண்வெளி மையத் துக்கு வீரர்களை அனுப்பி வைப்பதற்காக அமெரிக்காவின் விண்கலங்கள் கடந்த 2011-ம் ஆண்டுடன் ஓய்வுபெற்றன. இதை யடுத்து, இப்போது ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தின் உதவி யுடன் அமெரிக்க வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், நாசாவுக்கான விண்கலங்களை ஸ்பேஸ்எக்ஸ் (க்ரூ டிராகன்) மற்றும் போயிங் (சிஎஸ்டி-100) ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இவை வரும் 2017-ல் புளோரிடா மாகாணம் கேப் கேனவெரெல் பகுதியிலிருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பி பரிசோதிக்கப்பட உள்ளன. இதன்மூலம் வீரர்களை அனுப்புவ தற்காக ரஷ்யாவை நம்பியிருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும்.

இதில் பயணம் செய்வதற்காக சுனிதா வில்லியம்ஸ், ராபர்ட் பென்கன், எரிக் போ மற்றும் டவ்க்ளஸ் ஆகிய 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், புதிய விண்கலத்தை தயாரிக்கும் நிறுவன விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றுவார்கள். அப்போது விண்கலத்தின் வடிவமைப்பு, இயக்கம் பற்றிய பயிற்சி அளிக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

16 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

6 days ago

மேலும்