கொலம்பியாவில் முதல் கருணைக் கொலை

By ஐஏஎன்எஸ்

கொலம்பியா நாட்டில் பெரெய்ரா நகரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளான ஒருவரை கருணைக் கொலை செய்ய அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. அந்நாட்டில் கருணைக் கொலை மேற்கொள்ளப்படுவது இது முதன்முறையாகும்.

கொலம்பியாவில் வசித்து வருபவர் ஒவிடியோ கோன்சாலேஸ் (79). இவருக்கு முகத்தில் புற்றுநோய் ஏற்பட்டது. ஒருகட்டத்துக்கு மேல் மருத்துவர்களால் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போனது.

'வெஸ்டர்ன் ஆன்காலஜிக்கல் கிளினிக்' எனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, கருணைக் கொலை செய்ய வியாழக்கிழமை அனுமதி வழங்கப்பட்ட‌து.

கடந்த வாரமே அவர் கருணைக் கொலைக்கு ஆளாகியிருக்க வேண்டும். ஆனால், ஒருவர் கருணைக் கொலை செய்யப்பட வேண்டுமெனில், அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதால் கருணைக் கொலை செய்யப்படுவது தள்ளிப்போடப்பட்டது.

இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானவுடன், அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம், 'முடிந்த அளவு மனிதாபிமானத்துடன் அவரைக் கருணைக் கொலைக்கு உட்படுத்த ஆவண செய்ய வேண்டும்' என்று மருத்துவர்களை வலியுறுத்தியது.

இந்த ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி எவ்வாறு கருணைக் கொலை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றைப் பின்பற்றி, அவரை கருணைக் கொலைக்கு உட்படுத்த‌ வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

17 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

6 days ago

மேலும்