சிறுவர்களை கடத்தி தீவிரவாதிகளாக்கும் ஐஎஸ்: இராக்கில் பள்ளிக்குச் சென்ற 111 மாணவர்களை பிடித்துச் சென்றனர்

By ஐஏஎன்எஸ்

ஐஎஸ் இயக்கத்தினர் சிறுவர்களை கடத்திச் சென்று அவர்களை தீவிரவாதிகளாக மாற்ற பயிற்சி அளித்து வருகின்றனர்.

இராக், சிரியாவில் பல்வேறு கொடூரங்களை நிகழ்த்தி வருகிறது ஐஎஸ் இயக்கம். சன்னி முஸ்லிம்கள் தவிர வேறு யார் பிடிபட்டாலும் அவர்களின் தலையை வெட்டி வீடியோ வெளியிடுவது, பெண் களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்துவது என பல்வேறு கொடூரங்களை நிகழ்த்தி வரும் அந்த தீவிரவாத இயக்கம் இப் போது அடுத்த கட்ட கொடூரத்துக்கு சென்றுள்ளது.

இராக்கில் தங்கள் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளில் 111 பள்ளிச் சிறார்களை ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். இந்த சிறுவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள்.

சிறுவர்களை தங்கள் முகாம் களுக்கு அழைத்துச் சென்றுள்ள தீவிரவாதிகள் அங்கு அவர்களை மத போதனைகள் மூலம் மூளைச்சலவை செய்வதுடன், ஆயுதப் பயிற்சியும் அளித்து வருகின்றனர்.

ஆயுதம் ஏந்தும் அளவுக்கு உடல் வலு இல்லாத சிறார்களை மனித வெடிகுண்டுகளாக மாற்ற பயிற்சி அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிறார்களை கடத்தி சென்ற தற்கு எதிர்ப்புத் தெரிவித்த 78 ஆண்களை தீவிரவாதிகள் கைது என்ற பெயரில் அழைத்துச் சென்றுள்ளனர். இராக்கில் தங்கள் ஆதிக்கத்தில் உள்ள பகுதியில் இருந்த கடந்த ஓராண்டில் 1,420 சிறார்களை தீவிரவாதிகள் பிடித்துச் சென்றுள்ளனர். மேலும் அந்த சிறுவர்களைக் கொண்டு பலரது தலையையும் வெட்ட வைத் துள்ளனர்.

சிறுவயது முதலே அவர்களை மூளைச் சலவை செய்வதன் மூலம் எத்தகைய கொடூரமான செயலும் சிறிதும் இரக்கமின்றி செய்யும் கொடூர தீவிரவாதிகளை உருவாக்கும் பயிற்சி அளிக் கின்றனர். இது தீவிரவாதம் என்பதை எங்கள் மண்ணில் தலைமுறை தலைமுறையாக நீடிக்கச் செய்கிறது என்று இராக்கை சேர்ந்த குர்து இன மக்கள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் இதுபோன்று ஐஎஸ் தீவிரவாதிகள் சிறுவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்து வருகின்றனர். அவர்களுக்கு இஸ்லாமிய அரசை அமைக்கும் சிங்கக் குட்டிகள் என்ற சிறப்பு பெயரையும் அளித்துள் ளனர்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

6 days ago

மேலும்