போர், தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ஐரோப்பிய யூனியன் நாடுகளில் 1.37 லட்சம் பேர் தஞ்சம்: கடந்த ஆண்டைவிட 83 சதவீதம் அதிகம்

By ஏஎஃப்பி

கடந்த 6 மாதங்களில் மத்திய தரைகடல் வழியாக அபாயகரமான பயணம் மேற்கொண்டு 1.37 லட்சம் பேர் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா. வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

சிரியா உள்ளிட்ட நாடு களில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர், தீவிரவாத செயல், துன்புறுத்தல் உள் ளிட்ட காரணங்களால் பல்வேறு நாடுகளிலிருந்து வெளியேறு பவர்கள் மத்திய தரைகடல் வழியாக சட்டவிரோதமாக படகில் பயணம் செய்து ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சமடை கின்றனர்.

இவ்வாறு பயணிக்கும்போது, அளவுக்கதிகமாக பயணிகளை ஏற்றிவரும்போது படகு விபத்தில் சிக்கி பலர் உயிரிழப்பது அடிக்கடி நிகழ்கிறது.

கடந்த 6 மாதங்களில் இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,867 ஆகும். இதுவும் கடந்த ஆண்டைவிட அதிகம்.

அந்த வகையில் கடந்த 6 மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் 1.37 லட்சம் பேர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் குடியேறியவர்களைவிட 83 சதவீதம் அதிகம் ஆகும். இந்த நிலை மேலும் மோசமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, இத்தாலி அல்லது கிரீஸ் நாட்டுக்கு இந்த ஆண்டில் அகதிகளாக வந்த 3-ல் ஒருவர் போர் பதற்றம் நிலவும் சிரியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதுபோல தீவிரவாத சம்பவங்கள் நடக்கும் ஆப்கானிஸ் தான் மற்றும் இரிட்ரியாவி லிருந்து வந்தவர்கள் தலா 12 சதவீதம் பேர் ஆவர். மேலும் சோமாலியா, நைஜீரியா, இராக் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் கணிசமாக அகதிகளாக வருகின்றனர்.

இதற்கிடையே, ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை விவகாரம் பெரும் பிரச்சினையாக உரு வெடுத்துள்ளது. அகதிகளாக வந்து பசி, பட்டினி, நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப் பவர்களை அனைத்து உறுப்பு நாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற யோசனை வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்