சைக்கிளை திருடியதாக சிறுவனை கட்டிவைத்து அடித்துக் கொன்ற கும்பல்

By ஏஎஃப்பி

வங்கதேசத்தில் சைக்கிளை திருடிய தாக 13-வயது சிறுவனை ஒரு கும்பல் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக் கொன்றது. அப்போது எடுக்கப்பட்ட 28 நிமிட வீடியோ பதிவு சமூகவலைத்தளங்கள் மூலம் வங்கதேசம் முழுவதும் பரவி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனை கொன்றவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கோரி வங்கதேசம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதையடுத்து வங்கதேச போலீஸார் 5 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் கடந்த 8-ம் தேதி நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட 28 நிமிட வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் சாமுயுல் ஆலம் ரஜோன் என்ற அந்த சிறுவனை சைக்கிளை திருடியதாக குற்றம்சாட்டி இழுத்து வரும் ஒரு கும்பல் அவனை மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்து உதைக்கிறது.

தன்னை கொன்றுவிட வேண்டாம் என்று அந்த சிறுவன் கெஞ்சுவதை சிறிது பொருட்படுத்தாது பலர் சூழ்ந்து கொண்டு அவனை அடித்து உதைக்கிறார்கள். இறுதியில் அந்த சிறுவன் உயிரிழந்துவிடுகிறான். மிகக் கொடூரமான இந்த காட்சிகள் காண்பவர்களை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

14 mins ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்